அடிக்கடி கேட்கும் கேள்விகள்

 • ஒரு குறிப்பிட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டதொன்று என்பதை (தர உத்தரவாதம் அளிக்கப்பட்டது) நான் எவ்வாறு அறிந்துகொள்வது?
  குறிப்பிட்ட நிறுவனத்திற்கு TVEC வழங்கியுள்ள தகுதி அங்கீகாரப் பத்திரத்தையும் அதன் செயற்படு காலத்தையும் பரிசீலிக்கலாம். TVEC ஒரு குறிப்பிட்ட பயிற்சிக் கற்கைக்கு மட்டுமே அங்கீகாரப் பத்திரம் வழங்கியிருப்பின் அதன் தரம் TVEC ஆல் உறுதிப்படுத்தப்படுகின்றது.

 • ஒரு குறிப்பிட்ட பயிற்சி நிலையம் உறுதியான தரம் மிக்கதென்பதை நான் உவ்வாறு அறிந்து கொள்வது?
  முதலாவதாக அவர்களின் TVEC பதிவை பரிசீலிக்கவும். இதனை அவர்கள் தமது பயிற்சி நிலையத்தில் பகிரங்கமாக காட்சிப்படுத்தல் வேண்டும். இல்லையேல் நீங்கள் விண்ணப்பித்தால் அதன் பிரதியை வழங்கப்பட வேண்டும். பயிற்சிகள் நடத்துவதற்குத் தகுதியற்ற பதிவு காலாவதியான பயிற்சி நிலையங்கள் இனங்காண்பதற்கு பதிவு அத்தாட்சிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதியை அவதானிக்கவும். அத்தோடு TVEC இணையத் தளம் www.tvec.gov.lk இல் அவர்களது பதிவு நிலை தராதரத்தை உறுதி செய்துகொள்ளவும்.

 • எனது எதிர்காலத்தில் அமைய வேண்டிய தொழில் எதுவாக இருக்க வேண்டுமென்று நான் எற்கெனவே செய்திருப்பின் அதற்குப் பொருத்தமான பயிற்சி கற்கைநெறியை நான் எவ்வாறு தெரிவு செய்வது?
  TVET வெளியிட்டுள்ள TVET வழிகாட்டியில் தேவையான தகவல்கள் எல்லாம் தரப்பட்டுள்ளன. மேலும் இது பொதுத்துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்களினது பயிற்சி கற்கைகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டியாகவும் காணப்படுகின்றது. இதில் ஒவ்வொரு துறையினதும் பெயர், மாகாணம், முகவரி, பயிற்சி நிலைய முகவரி, தொடர்பு, விபரங்கள், பயிற்சிக் காலம். கற்கைக் கட்டணம், வயதெல்லை, பயிற்சி முறைமை, பயிற்சி ஆரம்பிக்கும் காலம், தொழில் வாய்ப்புகள் போன்ற விபரங்கள் தரப்பட்டுள்ளது. மேலும் தேவையேற்படின் TVET வழிகாட்டிக்காக www.tvec.gov.lk TVET இணையத்தளத்தை நாடவும்.

 • எனது எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு சிறந்த பொருத்தமான தொழில்துறையை எவ்வாறு நான் தெரிந்தெடுப்பது?
  உங்களுக்கு மிகவும் மனதிற்குப் பிடித்தமான அல்லது விரும்புகின்ற ஒரு துறையை தெரிவு செய்லாம். அத்தகைய தெரிவு சம்பந்தமான தெளிவின்மை இருப்பின் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தொழில் வழிகாட்டல் நிலையங்களில் பணியாற்றும் தொழில் வழிகாட்டல் அலுவலரின் சேவையைப் பெறுமாறு ஆலோசனை முன்வைக்கிறோம். இலங்கையில் தொழில் வழிகாட்டல் நிலையங்கள் தொடர்பான விபரங்களுக்காக இணையத்தளத்தை நாடவும். இங்கே அழுத்தவும்.
காப்புரிமை © 2017 இளைஞர் அலுவல்கள் மாநில அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்தது Pooranee Inspirations

971088
புதுப்பிக்கப்பட்டது: 14-09-2015 07:16