அமைச்சின் பிரிவுகள்

நிர்வாகப் பிரிவு

 • அமைச்சிற்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஸ்தாபன வேலைக்கான முகாமைத்தும் மற்றும் வழிகாட்டல் வழங்குதல்.
 • அமைச்சு மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு வேலை சம்பந்தமான வெளிநாட்டு புலமைப்பரிசில், வெளிநாட்டு பயிற்சி மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வழங்குதல்.
 • ஊழியர்களின் தேவைக்கேற்ப அலுவலக உபகரணங்கள் எழுதுகருவிகள், ஊழியநலன், பாதுகாப்பு, தேவையான எழுதுகருவிகள் மற்றும் பல சேவைகளை வழங்குதல்.
 • கட்டட பராமரிப்பு மற்றும் வாகன உதிர்பாக பராமரிப்பிற் ஈடுபடுதல்.
 • அமைச்சு ஊழியர்களுக்கு பலதரப்பட்ட கடன்களை வழங்குதல், முற்பணகணக்கின் கீழ் அரச நிறுவன ஊழியர்களுக்கு சொத்து மற்றும் வாகன கடன்களை வழங்குதல்.

இளைஞர் அபிவிருத்திப் பிரிவு

 • இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், நிகழ்ச்சிகள் மற்றும் செயற்றிட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
 • இளைஞர் அபிவிருத்திக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் சமூக சந்தைப்படுத்தல் நிகழ்ச்சிகளை அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்தல்.
 • இளைஞர் தொழிலாக்கலுக்கான தேசிய செயல் திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தல்.
 • இளைஞர்களின் தார்மீகத்தினை அபிவிருத்தி செய்யுமுகமாக நாகரிக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை
  நடைமுறைப்படுத்தல்.
 • இளைஞர் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் சர்வதேச ஒத்துழைப்பு.
 • இளைஞர் அபிவிருத்தி பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் / செயற்றிட்டங்களை கண்காணித்து மதிப்பீடு செய்தல்.

நிதிப் பிரிவு

 • அமைச்சு மற்றும் அமைச்சிற்கு கீழ் உள்ள நிறுவனங்களின் மொத்த நிதி முகாமைத்துவத்தை மேற்கொள்ளல்.
 • அமைச்சு மற்றும் அமைச்சிற்கு கீழ் உள்ள நிறுவனங்களின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்.
 • திறைசேரிக்காக நிதியினை பகிர்ந்தளித்தலும், வருமானத்தை சேகரித்தலும்.
 • திறைசேரி மற்றும் அதனுடன் தொடர்புடைய முகவர்களுக்கு கணக்கினைத் தயாரித்தல்.
 • ஓதுக்கீட்டுக் கணக்கினைத் தயாரித்தல்.
 • நிதிச் செயற்பாடுகளுக்காக திறைசேரி மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பினை மேற்கொள்ளல்.
 • அமைச்சின் கீழ் காணப்படும் வெளிநாட்டு செயற்திட்ட நிதியினை முகாமைத்துவம் செய்தல்.

திட்டமிடல் பிரிவு

 • TEVT பகுதிக்கான தத்திரோபாய திட்டமிடல், வருடாந்த செயற்திட்ட அறிக்கை, ஆகியவற்றைத் தயாரித்தல்.
 • செயற்திட்ட முன்மொழிவினைத் தயாரித்தல், செயற்திட்ட முன்மொழிவினை வெளி வளங்கள் பிரிவிற்கு முகப்பிட்டு நிதிக்காக விண்ணப்பம் கோரல்.
 • அமைச்சுக்குரிய வருடாந்த செயலாற்றறிக்கையினைத் தயாரித்தல்.
 • நிறுவனங்களினால் நடாத்தப்படும் கருத்திட்டம்/நிகழ்ச்சித்திட்டங்களின் அபிவிருத்தி சம்பந்தமாக செயலாற்றுகையை கண்காணித்தல், மற்றும்  அவற்றுடன் இணைந்து செயற்படல்.
 • முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தினை நடாத்துதலும், முகவர்களுடைய பயிற்சி நெறி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி நடவடிக்கைகளுடன் தொடர்ந்து செல்லல்.

உள்ளகக் கட்டுமானப் பிரிவு

 • அமைச்சு மற்றும் அமைச்சிற்கு கீழ் உள்ள நிறுவனங்களின் உள்ளகக் கட்டுமான வசதிகளின் அபிவிருத்தி தொடர்பாக மொத்த இணைப்பு மற்றும் வழிகாட்டலை மேற்கொள்ளல்.
 • உள்ளக கட்டுமான அபிவிருத்தி தொடர்பான நிகழ்ச்சிகளை கண்காணித்தல் மற்றும் செயற்படுத்தும் பொழுது ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் குறித்த காலத்தில் அந் நிகழ்ச்சியினை நிறைவு செய்தல்.
 • வெளிநாட்டு உதவியிலான கட்டடசெயற்திட்டம், உள்ளகக் கட்டுமான அபிவிருத்தி தொடர்பாக திட்டமிடல் மற்றும் கண்காணித்தல் செயற்பாட்டிற்கு செயலாளருக்கு உதவுதல்.
 • பொருள் மற்றும் சேவை கொள்வனவின் போது பிரதான கணக்காளருக்கு தொழில் நுட்ப உதவியினை வழங்குதல்.
 • உள்ளக கட்டுமான அபிவிருத்தி தொடர்பான செயற்திட்ட ழுன்மொழிவுகளை மதிப்பிடுதல் மற்றும் செயலாளரின் அனுமதியுடன் அவற்றினை தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்புதலும் ஊழியர்களுடன் தொடர்ச்சியான அவதானிப்பை மேற்கொள்ளல்.
 • அமைச்சு மற்றும் அமைச்சிற்கு கீழ் உள்ள நிறுவனங்களின் உள்ளகக் கட்டுமான திட்டமிடலின் போது அவற்றிற்கு உதவி புரிதலும் திறனாக, கட்டடங்களின் இடம் மற்றும் சேவைகளினை பயன்படுத்துவதற்கான நுட்பங்களைத் திட்டமிடல்.

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு

 • உள்ளகக் கணக்காய்வு முகாமைத்துவ செயற்குழுக் கூட்டங்களை கூட்டுதல் மற்றும் அறிக்கையிடல் உட்பட்ட செயற்பாடுகளுக்கு உறுதுணையாயிருத்தல்
 • அமைச்சிலுள்ள ஏற்ற பிரிவு சம்பந்தமான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளை நடத்த உறுதுணையாயிருத்தல்
 • அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் சம்பந்தமான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளின் பதில்களைப் பெற உறுதுணையாயிருத்தல்
 • அமைச்சின் உள்ளகக் கணக்காய்வு
 • அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வு
 • பொது கணக்காய்வு செயற்குழு, பொது தொழிற்துணிவு ஆர்வ செயற்குழு மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியவற்றின் கணக்காய்வு தொடர்புடைய விசாரணைகளுக்கு பதிலலிப்பதில் உறுதுணையாக செயற்படுதல்
 • கணக்காளர் மற்றும் கொடுப்பனவு பணிப்பாளரிடம் கணக்காய்வு தொடர்புபாக சமர்ப்பிக்கப்பட்ட மாதாந்த அறிக்கைகள், காலாண்டு அறிக்கைகள் மற்றும் ஆண்டறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்டதா என கவனித்தல்.
 • ஏனைய நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வு விசாரணை பதிவேடுகளை பராமரித்தல் மற்றும் உள்ளகக் கணக்காய்வு ஆவணங்களை பரீட்சித்தல்

சிறு வியாபார அபிவிருத்திப் பிரிவு

 • இளைஞர்களின் கைத்தொழில் வர்த்தக ஆற்றலினை மேம்படுத்தல்.
 • தொழிற் துணிவு ஆர்வத்தினை பெற வேலையற்ற இளைஞர்களை ஊக்குவித்தல்.
 • தொழிற் துணிவு ஆர்வத்தின் ஆற்றலையும் உருவாக்கல்திறனையும் தரமுயர்த்தல்.
 • தொழிற் துணிவு ஆர்வத்தின் அபிவிருத்திக்கு ஆதரவான சேவைகளை வழங்கல்.

காப்புரிமை © 2017 இளைஞர் அலுவல்கள் மாநில அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்தது Pooranee Inspirations

971065
புதுப்பிக்கப்பட்டது: 14-09-2015 07:16