குடிமக்கள் சாசனம்

இளைஞர் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான மக்களின் உரிமை மற்றும் அச் சேவையினை வழங்கும் நிறுவனங்களின் பொறுப்புக்கள் என்பவற்றை தெளிவுபடுத்துவதே இந்த குடிமக்கள் சாசனம் முன் வைக்கப்படுவதற்கான காரணமாகும்.

பொது / குடிமக்கள் பின்வரும் நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் :

 • அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களால் நடாத்தப்படும் பயிற்சி நெறிகள் பற்றிய தகவல்கள்.
 • பயிற்சி நியமங்கள் பற்றிய தகவல்கள்.
 • இளைஞர் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள்.
 • தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவை பற்றிய தகவல்கள்.
 • தொழிற் பாதை பற்றிய தகவல்கள் (தேசிய தொழிற் பயிற்சி தகுதி முறைமையின் மேல் நோக்கிய நகர்வு).
 • நிறுவனங்களின் பயிற்சி மற்றும் பதிவு பற்றிய தகவல்கள்.
 • பயிற்சி நெறிகளுக்கான அங்கீகாரம்  பற்றிய தகவல்கள்.

தொலைநோக்கு

வலுவுள்ள இளைய சமுதாயம்

செயற்பணி

பயனுறுதிவாய்ந்த கொள்கைச் சமூகத்தினையும் நிறுவகக் கட்டமைப்பினையும் ஏற்படுத்துவதன் மூலம் திறமைமிக்க பிரஜைகளாகும் வகையில் இளைஞர்களுக்குத் தேவையான திறன், அறிவு மற்றும் மனப்பாங்கினை வழங்கல்

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சிற்கான சட்ட உரிமை

2010.11.22 திகதி இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சிற்கு கீழ்க் குறிப்பிடப்படும் செயற்பாடுகளை மேற் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

 • இளைஞர் அபிவிருத்தி செயற்பாடுகள்.
 • வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக் கொள்கையினை உருவாக்கல்.
 • இளைஞர்களுக்காக தன்னார்வ தேசிய சேவை பரிந்துரைகளை மேற்கொள்ளல்.
 • தொழிலற்ற இளைஞர் பிரிவினரிடையே முயற்சியாண்மை நிபுணத்துவத்தை அபிவிருத்தி செய்தல்.
 • வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பாக கொள்கை, திட்டமிடல் மற்றும் நிகழ்ச்சிகளை செயற்படுத்தல்.
 • தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் தொழில்நுட்பக் கல்லூரிகளை நிர்வகித்தல்.
 • வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியப் பயிற்சி.
 • பயிலுனர் பயிற்சி.
 • தொழில்நுட்பவியல் டிப்ளோமா மட்டத்தில் பொறியியல் மாணவர்களை பயிற்றுவித்தல்.
 • தேசிய டிப்ளோமா, உயர் தேசிய டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு மட்டத்தில் சான்றிதழ் வழங்குதல்.
 • தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடாத்துதல்.

எமது குறிக்கோள்கள் மற்றும் சேவை பெறுனர்கள்

எமது குறிக்கோள்கள்

 • இலங்கையின் இளைஞர் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வழிகாட்டுவதற்காக தேசிய கொள்கையை உருவாக்கல் மற்றும் செயற்படுத்தல்.
 • திறன்களை விருத்தி செய்யும் வாய்ப்புக்களை விரிவாக்குவதன் மூலம் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் இளைஞர்களை பங்குபெறச் செய்தல்.
 • ஒர் உலகலாவிய தொழில் பணியாளர்களை உருவாக்கும் வகையில் வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சித் துறை சம்பந்தமான தரத்தினை மேம்படுத்தல்.
 • கைத்தொழில், வர்த்தகக், கலாச்சாரத்தினை இளைஞர்களிடையே உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கான தொடர்ச்சியான உயிர்நாடியாக இருக்கும் வாய்ப்புக்களை மேம்படுத்தல்.
 • சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பயனடையாத குழுக்களுக்கு பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி சந்தர்ப்பங்களுக்கான சமமான அணுகலை ஊக்கப்படுத்தல். (பின்தள்ளப்பட்ட குழுக்கள்).
 • வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் உயர் தகைமைகளைப் பாதுகாக்குமுகமாக மேல்நோக்கிய வழிகள் கிடைக்கப் பெறுவதினை உறுதிப்படுத்தல்.

எமது சேவை பெறுனர்கள்

 • இலங்கை இளைஞர் யுவதிகள்.
 • வாழ்க்கைத் தொழில் கல்வியினை வழங்கும் நிறுவனங்களின் ஆலோசகர்கள்.
 • வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்களின் ஊழியர்கள்.
 • வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டுள்ள தனியார்த் துறை ஊழியர்கள்.
 • வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் தனியார்த் துறை பயிற்சி நிறுவனங்கள்.

சேவை வழங்குவதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்

நிறுவனங்கள் முகவரி தொலைபேசி மின்னஞ்சல் இணையத்தளம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYCS) தேசிய இளைஞர் நிலையம் 65, ஹலெவல் வீதி, மஹரகம. +94 11 2850986-7
+94 11 2850759-60
youngnet[at]slt.lk www.srilankayouth.lk
Sri Lanka Youth Services (Privet)Limited (SYSL) தேசிய இளைஞர் நிலையம் 65, ஹலெவல் வீதி, மஹரகம. +94 11 2844250 yslmhg[at]sltnet.lk -
தேசிய இளைஞர் பரிசளிப்பு அதிகாரசபை (NYAA) தேசிய இளைஞர் நிலையம் 65, ஹலெவல் வீதி, மஹரகம. +94 11 2896563 sen.kahan[at]hotmail.com -
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்க சமாசம் (NYSCO) தேசிய இளைஞர் நிலையம் 65, ஹலெவல் வீதி, மஹரகம. +94 11 2837573 - -
தேசிய இளைஞர் படையணி இல. 420, பௌதாலோக மாவத்தை, கொழும்பு 07. +94 11 2684784
+94 11 2681566
youthcorpsq[at]yahoo.com www.youthcorps.lk
இலங்கை – ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனம் (CGTTI) இல. 582, காலி வீதி, கல்கிஸ்சை. (மொரடுவ) +94 11 2605625
+94 11 2605535
cgtt[at]sltnet.lk www.cgtti.slt.lk
இலங்கை அச்சிடல் நிறுவனம் (Print House)   +94 11 2686162
+94 11 2679781
sliopreg[at]sltnetnet.lk www.sliop.com
கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவகம் (OCEAN University) இல. 15, காக்கை தீவு, மட்டக்குளி, கொழும்பு 15. +94 11 2529862 / 63/66 nifne[at]sltnet.lk www.ocu.lk
National Center for Leadership Development (NCLD) எம்பிலிபிடிய +94 47 2230246 ictrld[at]yahoo.com -
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம் (DTET) த.பெ.இல.557, ஒல்கட் மாவத்தை, கொழும்பு 10. +94 11 2333478 tecedu[at]sri.lanka.net www.tecedu.gov.lk
முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழு (TVEC) ‘நிபுணதா பியச’, 3ம் மாடி 354/2, எல்விடிகல மாவத்தை, நாராயன்பிடிய, கொழும்பு 05. +94 11 225349291 tvec[at]slt.lk www.tvecgov.lk
வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பவியல் கல்லூரி (UNIVOTEC) இல. 100, கதவல வீதி, இரத்மலானை. +94 11 2624405
+94 11 2605864
+94 11 2622457
univotech[at]sltnet.ik www.univotec.ac.lk
வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபை (VTA) ‘நிபுணதா பியச’, 3ம் மாடி 354/2, எல்விடிகல மாவத்தை, நாராயன்பிடிய, கொழும்பு 05. +94 11 2595992
+94 11 2596516
+94 11 2596517
vta[at]eureka.lk www.vtasl.gov.lk
தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) இல. 971, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, வெலிகட, ராஜகிரிய. +94 11 2663680
+94 11 2667435
naitach[at]slt.lk www.naita.slt.lk
தேசிய மனிதவள அபிவிருத்தி சபை (NHRDC) ‘நிபுணதா பியச’, 3ம் மாடி 354/2, எல்விடிகல மாவத்தை, நாராயன்பிடிய, கொழும்பு 05. +94 11 2595680 nhrdesl[at]yahoo.com www.nhrdc.gov.lk
தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (NIBM) இல. 120/5, விஜேராம மாவத்தை, கொழும்பு 07. +94 11 2532100
+94 11 2685807
nibmdg[at]slt.lk www.nibm.gov,lk
திறன் அபிவிருத்தி நிதியம் (SDF) ‘நிபுணதா பியச’, 3ம் மாடி 354/2, எல்விடிகல மாவத்தை, நாராயன்பிடிய, கொழும்பு 05. +94 11 2507273
+94 11 2507274
lasilva[at]skillsdevlop.com -

நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்

சேவை உரிமை வழங்கல் நிறுவனம்
 • தேசிய உணர்வு தொடர்பான துண்டல், ஒழுக்கம் தொடர்பான உணர்வு, சமூக பொருளாதார பிரச்சனை தொடர்பான அறிவு மற்றும் சிரமாபிமானம் தொடர்பான உணர்வு என்பனவற்றை இளைஞர் யுவதிகளிடையே வளர்த்தல்.
 • தேசிய அபிவிருத்தி முன்மொழிவு செயற்பாடுகளில் இளைஞர் பங்குபற்றலை ஏற்படுத்தல், அறிவு மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான துறைகளில் பயிற்சியினை பெற்றுக் கொடுத்தல்.
 • இளைஞர்களிடையே போட்டி மற்றும் வெற்றி தொடர்பான உணர்வினை வளர்த்தலும் சரீர மேம்பாடும் மற்றும் விளையாட்டு வளர்ச்சியினை மீண்டலும்.
 • இளைஞர்களிடையே கலாச்சாரம், சாகித்தியம் மற்றும் கலை செயற்பாடுகளை மேம்படுத்தல், பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு வழங்கல் தொடர்பாக வசதிகளை வழங்குதல்.
 • வலது குறைந்த இளைஞர்களுக்கு உதவுதல்.
 • இளைஞர் அமைப்புக்களை உருவாக்கல், தற்போது உருவாக்கப்பட்டுள்ள அமைப்புக்களுக்கு உதவுதல்.
 • இளைஞர் சேவைகள் செயற்றிட்டத்தினை திட்டமிடல், இணைத்தல், மேம்படுத்தல் மற்றும் வழிநடத்தல்.
1979 இலக்கம் 69 தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சட்டமூலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYSC)
 • தொழிலற்ற இளைஞர் பிரிவினருக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குதல்.
 • தேசிய அபிவிருத்திக்காக இளைஞர் பிரிவினரை இயக்குதல் மற்றும் தைரியப்படுத்தல்.
 • இலங்கை இளைஞர்களின் திறமையினை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லல்.
 • இளைஞர் வேவைகள் மன்றத்துடன் தொடர்புடைய இளைஞர் பிரிவினர் மற்றும் ஊழியர்களுக்கு வியாபார பயிற்சி சந்தர்ப்பங்களை வழங்குதல்.
  National Youth Services Council Limited (NYSC Ltd)
 • 14 தொடக்கம் 25 வயது வரையிலான இளைஞர்களுக்கு தங்களது ஆளுமை மற்றும் பொறுப்பு தொடர்பான குணாம்சங்களை வளர்த்துக் கொள்ளல், குறித்த திறனுடன் தொடர்புடைய செயலாற்றுகை மட்டத்தினை பெற்றுக் கொள்ளல், ஆய்வு, புதிய கண்டு பிடிப்பு, மற்றும் ஆத்ம விசுவாசம் தொடர்பான ஆர்வத்தினை அதிகரித்தலுடன் தான் வசிக்கும் சமூகத்திற்கு உதவி செய்யும் எண்ணப்பாங்கு தொடர்பாக ஊக்கம் மற்றும் சவாலினை ஏற்படுத்தல்.
 • தனது வாழ்க்கைக்கு மிகவும் பயன்பாடுடையது என தான் உணர்ந்து கொண்ட திறமை மற்றும் நிபுணத்துவத்தை பங்கிட்டுக் கொள்வதன் மூலம் இளைஞர் பரம்பரையின் அபிவிருத்திக்கு மூத்தோரின் பங்களிப்பினையும் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தல்.
1979 இலக்கம் 611 அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க 1979 ஜுலை மாதம் 25 மற்றும் 1980 செப்டம்பர் மாதம் 24 திகதி அமைச்சரவை மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இசைவாக. தேசிய இளைஞர் பரிசளிப்பு அதிகாரசபை (NYAA)
 • அங்கத்துவ சங்கங்களின் செயற்பாடுகளை இலகுவாக்கலும், நோக்கத்தினை நிறைவு செய்து கொள்வதற்கு தேவையான உதவி செய்தலும், ஒன்றிணைந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் மற்றும் நோக்கத்தினை நிறைவு செய்து கொள்வதற்கு அவசியமான வியாபார நவடிக்கைகளில் ஈடுபடல்.
 • தேசிய மட்டத்திலான அபிவிருத்தி செயற்பாடுகளில், இளைஞர் சேவைகள் கொள்கை உருவாக்கம் மற்றும் செயற்படுத்தலில் தமது அங்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தல்.
பதிவு இலக்கம்: கொ/2689
பதிவு திகதி: 1986.01.01
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்க சமாசம் (NYSCO)
 • தொழிற் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டல், மேற்பார்வை மற்றும் இணைப்பினை மேற்கொள்ளல்.
 • தேவையினை அடையாளங் காணல் மற்றும் தகுதியான நீண்டகால மற்றும் குறுங்கால தொழிற் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை உருவாக்குதல்.
 • தொழிற் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்கு தேவையான ஆலோசனை வளம் மற்றும் பொருள் வழங்குதல்.
 • தொழிற் கல்வி மற்றும் பயிற்சி வழங்குதல,; பலாபலன் மற்றும் செயற்றிறனாக செயற்படுத்துவதற்காக ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் முகாமையாளர்கள் போன்ற ஊழியப்படையினை மேம்படுத்தல்.
அச/93/310/022 இலக்க அமைச்சரவை தீர்மானம் 1993 மார்ச் 10ம் திகதி தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம் (DTET)
 • பொருளாதாரத்தில் மனித வளத்தின் தேவைப்பாட்டிற்கு பொருந்தக் கூடிய விதத்தில் சகல மட்டத்திலும் முன்றாம் நிலை, வாழ்க்கைத் தொழிற் கல்வியினை திட்டமிடல், இணைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
 • சான்றிதழ் மற்றும் வேறு சாஸ்திரிய நிபுணத்துவம் உள்ளடங்கலாக முன்றாம் நிலை கல்வியினை வழங்குவதற்காக தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையிளை அபிவிருத்தி செய்தல்.
 • பாடநெறிகளை அங்கீகரித்தல்.
 • பயிற்சி வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல்.
 • நிபுணத்துவ தர முறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்.
1990 இலக்கம் 20 முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழு சட்டமூலம் முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழு (TVEC)
 • வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சித் துறையின் மாணவர்களின் இயலுமை மற்றும் நிபுணத்துவத்தில் தொடர்ச்சியான அபிவிருத்தியினை ஏற்படுத்தி பல்கலைக்கழக கல்வி வழங்க வசதிகளை ஏற்படுத்தல்.
 • வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சித் துறை மற்றும் கைத்தொழிற் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பயிற்சி கிரமோபயம் தொடர்பான அறிவினை ஏற்படுத்தல்.
 • வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சி பாடநெறியினை தயாரிப்பதன் மூலம் மத்திய மட்டத்திலான தொழில்நுட்ப தகுதி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தல்.
 • தேசிய தொழில்நுட்ப தகுதி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் நிபுணத்துவத்தை அதிகரிப்பதற்கும் மற்றும் கல்வித் தகுதியினை மேம்படுத்துவதற்கும் தேவையான பயிற்சி பாடநெறியினை தயாரித்தல்.
 • வாழ்க்கைத் தொழில் அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறையின் பங்குபற்றல் ஏற்படும் விதத்தில் பட்ட பாடநெறியினை அபிவிருத்தி செய்தல்.
2008 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சட்டமூலம் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பவியல் கல்லூரி (UNIVOTECH)
 • வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிகழ்ச்சி தயாரித்தல் மற்றும் அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு அவசியமான வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை நேரடியாக மற்றும் ஏனை நிறுவனங்களுடன் இணைந்தும் வழங்குதல்.
 • தேசிய வாழ்க்கைத் தொழில் மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் தேசிய சான்றிதழ் வழங்குதல்.
 • வாழ்க்கைத் தொழிற் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு மேலதிக பயிற்சி வழங்குதல்.
1995 இலக்கம் 12 வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபை சட்டமூலம் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபை (VTA)
 • மூன்று தேசிய நிறுவனங்கள் மற்றும் பிரதேச பயிற்சிக்கு மேலதிகமாக தொழிற்சாலையினை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியினை வழங்குதல்.
 • ஏனைய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு உள்ளக பயிற்சி வழங்குதல்.
 • மொரடுவ, பேராதெனிய மற்றும் ருகுணு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு மாணவர்கள் ஏனைய டிப்ளோமா பாடநெறி மாணவர்களுக்கு தேவையான இயந்திரப் பயிற்சியினை வழங்குதல்.
 • முயற்சியாண்மை நிபுணத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்காக கடன் பெற்றுக் கொடுத்தல்.
1990 இலக்கம் 20 முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழு சட்டமூலம் பகுதி II தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA)
 • ஆய்வு, மதிப்பீடு, பரீட்சை மற்றும் பரிசோதனை நடாத்துதல்
 • சொற்பொழிவு மற்றும் பயிற்சிப் பட்டறை நடாத்துதல்.
 • மனிதவள அபிவிருத்தி தொடர்பாக வெளியீடுகளை மேற்கொள்ளல்.
1997 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டமூலம் தேசிய மனிதவள அபிவிருத்தி சபை
 • கணிணி கல்வியினை வழங்குதல்.
 • வியாபார முகாமைத்துவக் கல்வி மற்றும் பயிற்சியினை வழங்குதலும் மேம்படுத்தலும்.
 • முகாமைத்துவ ஆலோசனை சேவைகள் வழங்குதல்.
1976, 23ம் இலக்க சட்டமூலத்தினால் திருத்தப்பட்டுள்ளது தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (NIBM)
 • அச்சு மற்றும் கிராபிக்ஸ் துறையில் பயிற்சிப் பாடநெறி நடாத்துதல்.
 • அச்சு மற்றும் கிராபிக்ஸ் துறை தொடர்பாகவும் அத்துறையில் காணப்படும் வேலை வாய்ப்பு தொடர்பாகவும் பாடசாலை விட்டு விலகிய மாணவர்களுக்கு அறிëட்டற் கூட்டம் மற்றும் பயிற்சிப் பட்டறை நடாத்துதல்.
  இன்கிரின் இலங்கை அச்சு மற்றும் கிரபிக்ஸ் நிறுவனம் (INGRIN)
 • தொழில் நோக்கான பயிற்சி, நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் மீள் பயிற்சி.
 • உயர் பயிற்சி பெற்ற நிபுணத்துவ மற்றும் ஊக்கமான ஊழியப் படையினை அபிவிருத்தி செய்வதற்காக முயற்சியாண்மையினை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி மற்றும் மேம்படுத்தல்.
 • பயிற்சி நிறுவனங்கள் சேவை பெறுனர்களுக்கிடையில் தொடர்பினை மேம்படுத்தல்.
Articles of Association Company Act திறன் அபிவிருத்தி நிதியம் (SDF)
 • இளைஞர் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி வழங்குதல்.
 • வாழ்க்கைத் தொழிற் கல்வியை வழங்குதல்.
2002 இலக்கம் 21 இளைஞர் படையணி சட்டமூலம் தேசிய இளைஞர் படையணி
 • வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிகழ்ச்சிகளை தயாரித்தல் மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி வழங்குதல்.
 • வாழ்க்கைத் தொழிற் பயிற்சி பெற்ற நபர்களுக்கு தேசிய வாழ்க்கைத் தொழில் மதிப்பீடு மற்றும் பரீட்சைகளை நடாத்தலும் சான்றிதழ் மற்றும் ஏனைய பரிசுகளை வழங்கலும்.
 • மோட்டார் வாகன கைத்தொழிலுடன் தொடர்புடைய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி, மதிப்பீடு, அபிவிருத்தி மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்.
 • பொருத்தமான தொழிற் சந்தர்ப்பங்களை தெரிவு செய்து கொள்வதற்கு வாழ்க்கைத் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவை வழங்குதல்.
 • அரச மற்றும் தனியார் துறை வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவித்தல், இணைத்தல் மற்றும் அதற்கு வசதிகளை வழங்குதல்.
 • பயிற்சி நெறிகளை நடாத்துவதற்கு வலய மத்தியஸ்தானங்களை உருவாக்குதல்.
 • தேசிய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைப்பு மற்றும் நிறுவங்களுடன் இணைப்பினை ஏற்படுத்தல்.
  இலங்கை – ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனம் (CGTTI)
 • அச்சகங்களின் அச்சிடும் தரத்தினை மேம்படுத்துவதற்காக அச்சகங்களில் தற்போது தொழில் புரியும் ஊழியர்களை பயிற்றுவித்தல்.
 • அச்சிடல் தொழில்நுட்ப விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ துறைகளில் பயிற்சி பாடநெறி ஒழுங்குபடுத்தல், சான்றிதழ் மற்றும் பரிசு வழங்குதல்.
 • அச்சு தொழிலில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு வார செய்திப் பத்திரிகைகள் மற்றும் வேறு வெளியீடுகள் மூலம் தகவல் திரட்டுதல் மற்றும் வினியோகித்தல், அச்சுத் தொழிற் பயிற்சியுடன் தொடர்புபட்ட வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக் கண்காட்சிகளுக்கு செல்லல் மற்றும் பங்குபற்றல்.
1984 இலக்கம் 18 இலங்கை அச்சிடல் நிறுவனம் சட்டமூலம் இலங்கை அச்சிடல் நிறுவனம்
 • மீன்பிடி மற்றும் கடற்றொழில் இயந்திரவியல் கல்வித் துறையில் பாடநெறிகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை உருவாக்குதல், தொழில் நிபுணத்துவத்தை ஏற்படுத்துவதற்காக கல்விப் பாடநெறிகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் வழங்குதல்.
 • மீன்பிடி மற்றும் கடற்றொழில் இயந்திரவியல் துறையில் கல்வி தொடர்பான கலந்துறையாடல், கருத்தரங்கம், நேர்முகப் பரீட்சை நடாத்துதல் மற்றும் நடத்துவதற்கு அவசியமான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
 • மீன்பிடி மற்றும் கடற்றொழில் சாத்திரத்தில் கல்வி மற்றும் செயற்றிட்ட பயிற்சி தொடர்பான பரிசோதனைகள், ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை நடாத்துதலும் மேம்படுத்தலும்.
1999 இலக்கம் 36 கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவக சட்ட மூலம் கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவகம் (OCEAN University)
 • கிராமத் தலைவர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்களுக்காக தலைமைத்துவ திறமை அபிவிருத்தி குறுங்கால பயிற்சி பாடநெறி நடாத்துதல்.
 • முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி பாடநெறி நடாத்துதல்.
 • பாடசாலை மாணவத் தலைவர் பயிற்சி பாடநெறி நடாத்துதல்.
அப்போது காணப்பட்ட அரசாங்கத்தின் பிரதமரின் 1988 மார்ச் 09 திகதிலான கடிதம் கிராமிய தலைவர்களை பயிற்றுவிப்பதற்கான சர்வதேச நிலையம் (ICTRL)

தரங்கள்

செயற்பாடு தரம் நிறுவனம்
விண்ணப்பம் கோரல் தகைமை
 • வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்தல்.
 • வெகுசன ஊடகம் மூலம்.
 • துண்டுப் பிரசுரம் மூலம்.
 • வழிகாட்டல் சொற்பொழிவு மூலம்
 • அமைச்சின் கீழுள்ள சகல பயிற்சி நிறுவனங்களில்
சேர்த்துக் கொள்ளல் தகைமை
 • கல்வித் தகைமை
 • தொழிற் தகைமை
 • தேசிய வாழ்க்கை தொழிற் தகைமை (NVQ)
(தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகத்திற்கு சேர்த்துக் கொள்ளல்)
 • அமைச்சின் கீழுள்ள சகல பயிற்சி நிறுவனங்களில்
பயிற்சி தகைமை
 • தேசிய வாழ்க்கை தொழிற் தகைமை பயிற்சி
 • நிபுணத்துவ அடிப்படையிலான பயிற்சி (பாடநெறி, தேசிய நிபுணத்துவ அங்கீகாரம்)
 • அமைச்சின் கீழுள்ள சகல பயிற்சி நிறுவனங்கள்
சான்றிதழ் வழங்குதல் தகைமை
 • தேசிய வாழ்க்கை தொழிற் தகைமையின் (NVQ) கீழ் சான்றிதழ் வழங்குதல்.
 • நிபுணத்துவ அடிப்படையிலான பயிற்சி சான்றிதழ்
 • முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழு
பாடநெறி தகைமை
 • முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகள் TVEC
 • முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழு
நிறுவனங்களை பதிவு செய்தல் தகைமை
 • முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்கள்
 • முன்றாம் நிலை வாழ்க்கைத் தொழிற் கல்வி ஆணைக்குழு

எமது அர்ப்பணிப்பு மற்றும் எதிர்ப்பார்ப்பு

எமது அர்ப்பணிப்பு:

பொது மக்கள் / சேவை பெறுனர்களுக்காக எங்களால் மேற்கொள்ளப்படும் சேவைகள்

 • உண்மையாக
 • சட்ட பூர்வமாக
 • கௌரவமாக
 • புரிந்து கொள்ளலுடன்
 • பக்கம் சாராமல்
 • வெளிப்படையாக
 • பொறுப்பாக
 • உத்தரவாதமாக
 • உடனடியாக
 • செயற்றிறனாக
 • பலன்தரு விதத்தில்

எமது எதிர்ப்பார்ப்பு

 • இலங்கையின் குடிமக்களாக நீங்கள் உங்களது பொறுப்பு மற்றும் உரிமைகளை சரியாகப் புரிந்து கொண்டு, வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தின் மூலம் தமக்கு மிகப் பொருத்தமான வாழ்க்கை மேம்பாடு மற்றும் வாழ்க்கைத் தொழில் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்து தனியாள் விருத்தி மற்றும் நாட்டிற்கு நல்ல சேவையினை வழங்க பங்களிப்பு நல்குதல்.
 • தரமாக மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கு இசைவாக தொழிற் பயிற்சியினை வழங்குதல்.

முறைப்பாடு மற்றும் பிரச்சனைகள்

முறைப்பாடு, பிரச்சனைகள் தீர்வு செய்தல் தொடர்பாக எங்களது நடைமுறைகள்

குடிமக்கள் / சேவை பெறுனர்கள் மேற்கொள்ளும் சகல விண்ணப்பங்கள், கூற்றுக்கள், தொடர்பாடல்கள் இயலுமான சகல சந்தர்ப்பங்களிலும், கிடைத்த உடனேயே இவ்வுறுதி மொழியில் கூறப்பட்டுள்ள விதத்தில் பதில் அளிப்பதற்கு நாங்கள் கடற்பாடுடையவர்களாக காணப்படுகின்றோம். குறிப்பிட்டுள்ள தகுதி காணப்படும் சந்தர்ப்பத்தில் உங்களுடைய விண்ணப்பம் காட்டப்பட்டுள்ள காலத்தினுள் எங்களால் நிறைவு செய்யப்பட முடியும். உங்களுடைய விண்ணப்பம் தவிர்க்க முடியாத காரணத்தினால் தாமதமானால் அது தொடர்பில் நாம் உங்களுக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம். எங்களுடைய ஊழியர்கள் கௌரவமாக உங்களுக்கு அவசியமான சேவையினை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் அது தொடர்பாக உடனடியாக தெரியப்படுத்துங்கள். இவ்வுறுதி மொழி தொடர்பாக உங்களுடைய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை நாம் வரவேற்கின்றோம்.

உங்களுடைய முறைப்பாடு கிடைக்கப் பெற்றதைப் பற்றி 03 நாட்களுக்குள் தெரியப்படுத்துவதுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் கலந்துரையாடி அது தொடர்பான இறுதி பதிலினை உங்களுக்கு வழங்குவோம்.

முகவரி : செயலாளர்
இளைஞர் அலுவல்கள் மாநில அமைச்சுரவையில்
நிபுணதா பியச
இல. 354/2 எல்விடிகல மாவத்தை,
கொழும்பு 05.
தொலைபேசி : +94 11 2597801
தொலைநகல் : +94 11 2597804
இணையத்தளம் : www.youthskillsmin.gov.lk

காப்புரிமை © 2017 இளைஞர் அலுவல்கள் மாநில அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்தது Pooranee Inspirations

971070
புதுப்பிக்கப்பட்டது: 14-09-2015 07:16